Denvaril Damodaran.

Denvaril Damodaran.

சிறு கதை 2. .
.டென்வரில் தாமோதரன் .
வால்மார்டி லிருந்து வெளியே வந்த தாமோதரன் தன்னை யாரோ அழைப்பதை கேட்டு திரும்பி பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு ,காரணம் ,அவன் நண்பன் ராமு .
ராமு வுக்கு ஒரே ஆச்சரியம் .டென்வரில் இவன் எப்படி வந்தான் என்று.
அதே கேள்வி குறி தமொதரனுகும் எழுந்தது. ராமு , நீ எப்போ,இங்கு வந்தாய்.
அது ஒரு பெரிய கதை ,நான் என் அப்பாவை ,தேடி இங்கு வந்தேன். என் ஆபீசில் இங்கு ஒரு மாதம் ப்ராஜெக்ட் வொர்க் இருந்ததால் என்னை அனுப்பினார்கள் .நானும் அப்பாவை கண்டுபிடிக்க ஒப்புக்கொண்டு இங்கே வந்தியன் .அதைகேட்ட ராமு ,
உன் அப்பா எப்படி டென்வர் வந்தார் ,விவரமாக சொல்லு.
உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல போகிறியன். நாம் ஸ்கூலில் படிக்கும் போது என் அப்பா ,அவர் நண்பர் ,ஒருவர் வெகு காலமாக ,இங்கு இருக்கிறார் .நான் அங்கு போய், நிறை ய சம்பாதித்து ,மூன்று வருடங்களில் வந்து விடுகிரியன் என்று ,அம்மாவை ,கன்வின்சே பண்ணி ,அம்மாவிடம் இருந்த ,எல்லா நகையும் விற்று டென்வெருக்கு விமானம் ஏறிவிட்டார் .மூன்று வருடம், இருபது வருடம் ,ஆகியும் ஒரு லெட்டெர் , இல்லை. இதே கவலையில் ,அம்மா இரண்டு மாதம் முன்பு ,காலமாகிவிட்டாள் என்னை கஷ்டப்பட்டு ,படிக்கவைத்து,ஒரு பெரிய கம்பெனியில் , சிபாரிசில் சேர்த்தும், பார்த்து விட்டு இரண்டு மதம் முன்பு கண்ணை முடி விட்டாள்.l
அவன் கதையை கேட்ட ராமு ,நீ உன் அப்பாவை எப்படி ,கண்டுபிடிப்பாய்
.தாமோதரன்,என் கதை ,இருக்கட்டும் ,நீ எப்படி டென்வரில்
ராமு, நான் இங்கு ஒரு எச்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிரியன்
வந்து மூன்று வருஷம் ஆகி விட்டது.நீ எங்கு தங்குகிறாய்
தாமோதரன்,என் ஆபீஸ் நண்பனுடன் , ஹெம்பெடன் ஏரியாவில்
ராமு,சூப்பர் ஏரியா ,நான் டோவ்ன் டவுன் இல் இருகிரியன் இந்தா என் கார்டு ,கீப் இன் டச் ,நான் அவசரமாக போகணும். உன் அப்பா சிக்கிரம் கிடைக்கணும்னு பெருமாளை .வேண்டிகிரியன்
தாமோதரன் ,ஓகே ,நான் நாளைக்கு போன் பண்ரியன் , என் கார்டு இல்லை
ராமு ,பரவில்லை ,நான் அர்ஜெண்ட் ஆக போகணும் ,கார்டு மிஸ் பண்ணாதே
தாமோதரன் ,இல்லை , பாய் .
ராமு போனவுடன் ,தாமோதரன் ,நேராக ,தன் இடத்திற்கு வந்தான் .
இன்னும் ஒரு மாதத்துக்குள் அப்பா எப்படி கிடைப்பார் ,என்று யோசனை பண்ண ஆரம்பித்தான் .அப்பா போட்டோ பழசு ,அதுக்கும் இப்ப பாக்கற
அப்பாவுக்கும் ,நிறை யா வித்தியாசம் இருக்கும் .அவன் கடைசியாக ,அப்பாவை பார்த்தது , 8 வயசில் . யோசனை தடை பட்டது அவன் ஆபீஸ் நண்பன் வந்ததினால்
என்ன தாம் ,எப்போ வந்தே ,அவன் நண்பன் சேகர் கேட்டவுடன்,
தாம் ,இப்போதான்
சேகர்,ஓகே.எங்கே போனே ,
தாம்,வால்மார்ட் ,அங்கே என் நண்பன் ராமு வை பார்த்தியன் ,கூட படித்தவன் .
சேகர் ,குட் ,சரி ,காலையில் பார்க்கலாம்
தாம்,குட் நைட்.
தாம் தன சோக கதையை இது வரை ,ராமு வை தவிர வேறு ,யாரிடமும் சொல்ல வில்லை .ராமு அவன் ஆப்த நண்பன் அதனால் அவனிடம் சொன்னான் .அப்படியே படுத்து கண்ணயர்ந்து ,துங்கி விட்டான்.
மறு நாள் காலை ,சேகருடன் காரில் ஆபீஸ் வந்தான் .மதியம் ,வரை மூச்சு விட டைம் இல்லை .லஞ்ச் போது சேகருடன் இன்னும் ஒரு ஆபீஸ் நண்பன் ,சேகர் ,மீட் சந்தானம் .தாம் உடனே ,நண்பன்டா ,என்று சொல்லனும்னு ஆசை பட்டு ,அடகிகொண்டு விட்டான்.
தாமோதரன் ,என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டான் .
சந்தானம். உங்களை ,பார்த்ததில் ரொம்ப சந்தோசம் , நீங்கள் ,சென்னையா
தாம்.இல்லை,மதுரை
சந்தானம்.அப்படியா. மதுரைக்கு நான் அடிக்கடி வறுவியன்.நல்ல ஊர் .
அதற்குள் தாமோதரனை ,அவன் பாஸ் அழைக்கவே ,கிளம்பிவிட்டான்.
மறு நாள் தாமோதரன் ராமுவுக்கு போன் பண்ணி ,எப்படி இருக்கிறான் என்று விசாரித்தான். ராமு வும் அவன் அப்பா பற்றி எதாவது தகவல் ,தெரிந்ததா என்று ஆவலாக கேட்டான்.தாம் ஒரு நாளில் என்ன தகவல் கிடைக்கும் ,பார்ப்போம் நான் தேடுவதை விட போவதில்லை என திட்டவட்டமாக சொல்லிவிட்டான். நாட்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அது தன பாட்டுக்கு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.தாமோதரன் வந்து 26 நாட்கள் ஓடிவிட்டது.இன்னும் மூன்று தினங்களில் அவன் சென்னை கிளம்பவேண்டும். அன்று ஆபீஸ் விட்டு டௌன்டவுன் போய்,ஊருக்கு ஷாப்பிங் பண்ணலாம் என்று போனான் .அங்கு ஒரு கடையில் ஒரு பாக் கிழே கிடந்தது .அதை எடுத்து சுற்றும்
முற்றும் பார்த்து யாரவது விட்டுவிட்டு தேடுகிரர்களா என்று பார்த்தான்
யாரும் தெரிய வில்லை . இருந்தும் அவன் வெளியே வந்து பார்த்தான்
அங்கு
ஒரு பெண்மணி எதையோ தேடுவதை பார்த்தான் .அவளிடம் வந்து ஆங்கிலத்தில் என்ன தேடுகிரிர்கள் என கேட்டான் .அதற்கு அவள் இவனை பார்த்து , இந்தியா என்று கேட்டாள்.தாமோதரன் ,ஆம் இந்த பை உங்களுதா .
அந்த பெண்மணி ,ஆம் , இதை கடையில் விட்டது மறந்து விட்டது. நீங்கள் எங்கு இருகிறிர்கள் .தாம் ,நான் ஆபீஸ் விசயமாக டென்வர் வந்தியன் .
அப்படியா ,ரொம்ப சந்தோசம் ,நான் இங்கு பக்கத்து ஸ்ட்ரீட்டில் இருகிரியன் ,என் வீட்டுக்கு வாங்க என்று கட்டாயபடுத்தி அழைத்து சென்றாள். வீடு நன்றாக இருந்தது . தாம் .,அம்மா உங்கள் பையில் எல்லாம் இருக்கிறதா ,என்று பாருங்கள். பரவயில்லை தம்பி. உங்களை .பார்த்தா நேர்மையானவராக ,இருகிறிர்கள். .அப்படிஇல்லை என் அப்பா ,எப்போதும் சொல்லுவார் ,யார் பொருளை திருப்பி கொடுத்தாலும் ,அவர்களை பார்த்து வாங்க ,சொல்லு என்று அறிவுரை பண்ணியிருக்கிறார். சரி என்று அந்த ,பெண்மணி பை யை திறந்து எல்லா பொருள்களையும் கொட்டினார். அதில் ஒரு போட்டோ இருந்தது.அதை காண்பித்து ,என் சாமானை ,நீங்கள் கொடுத்துவிட்டிர்கள் .இந்த போடவில் இருக்கும் பையனை நான் எப்படி தேடுவியன் என்று அந்த போட்டோவை தாம் கு காட்டினாள்.அதை பார்த்த தாம்கு ஆச்சரியமாக போய்விட்டது.அந்த போடவில் இருந்தது அவன் அப்பா. மற்றும் தாமோதரன் சிறு வயதில். அந்த போட்டோவை பார்த்த தாமோதரன் ,
இவரை எப்படி உங்களுக்கு தெரியும்.அவரை உடனே பார்க்கணும் .அந்த பெண்மணி ருக்மணி ,
இவரை பார்க்கமுடியாது ,சுமார் இருபது வருடங்கள் முன் நானும் இவரும், சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் ,டென்வேற்கு பயணம் , வந்தோம் .வரும் பொது அவர் தான் எதற்காக டென்வர் ,வருகிறார் தன் லட்சியம் ,ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய ,மனிதனாக பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.அப்போது
அவர் மகன் ,போட்டோ ,த மற்றும் அவர் போட்டோவை
எனக்கு காட்டினார்.டென்வர் வந்தவுடன் எனக்கு அவர் நண்பனை பார்த்து விட்டு போன் பன்னுகிரியன் என்று அவர் நண்பர் விலாசம் கொடுத்தார். பிறகு ஒரு நாள் கழித்து அவரிடம் இருந்து ,போன் வந்தது ,அவர் நண்பர் ,மகன் விபத்தில் ,இறந்ததினால் ,எல்லா வற்றையும் மறந்து கோமாவில் போய்விட்டார் என்று அதை கேட்ட .நான் உடனே நீங்கள் ,என்னிடம் வந்து தங்குங்கள் என்று சொல்லி உடனே அட்ரஸ் கொடுத்து
வர சொன்னியன்.விதி ,வேறு விதமாக விளையாடிவிட்டது.
என்ன அம்மா ,என்னாச்சு.
அவர் வரும்போது ,நண்பன் கோமாவில் போனதை நினைத்து இதய துடிப்பால் வழியிலயே இறந்து விட்டார்.அவர் பெட்டி எல்லாம் யாரோ ,எடுத்து கொண்டு போய்விட்டார்கள்.ஆனால் அவர் விமானத்தில் கொடுத்த இந்த போட்டோ என்னிடம் இருக்கிறது.நான் எப்படி அவர் குடும்பத்தாரை கண்டுபிடிப்பின் .
அம்மா இதில் இருப்பது என் அப்பா தான் ,என்று தாம் தன்னிடம் இருந்த அப்பா போட்டோவை காண்பித்தான். பெண்மணி ஆச்சர்யத்துடன் அந்த போட்டோவை பார்த்து நே. தாமோதரன் ,உன் அப்பா சொன்னது இன்னிக்கும் எனக்கு நினைவிருக்கிறது. பெருமாள் பெரியவன் என அவனை பாசத்துடன் ,அணைத்து கொண்டாள். அம்மா ,இன்று உங்களை பார்த்ததில் ,என் அப்பாவின் ,மரணம் தெரிந்தது. இங்கு யாருடன் இருக்கிறிர்கள் அதற்கு ருக்மிணி .என் கணவர் ஒரு கம்பெனி நடத்தி வந்தார் ,அவரும் போன வருடம் காலமாகிவிட்டார்.எனக்கு யாரும் இல்லை.
எனக்கும் இப்போது யாரும் இல்லை ,அகவே நீங்கள் என்னுடன் இந்திய வந்து விடுங்கள் என அன்போடு தாம் அந்த பெண்மணி ருக்மிணியை கேட்டான்.
ருக்மிணி ,இல்லை, இனிமேல் எங்குட நீ தான் இருக்கணும் ..என் கம்பனியை பார்த்துக்கொள்ளனும். தாம் அந்த அன்பு தெய்வத்தின் கட்டளை ஐ மீற முடியவில்லை .
ஒரு மாதத்தில் அப்பாவை தேடி வந்த தாமோதரன் நிரந்தர டென்வர் தாமோதரன் ஆகி விட்டான் அவன் அப்பாவின் கனவு தாமோதரன் பெரிய மனிதனகவேண்டும் . என்றது நனவாகிவிட்டது. அவன் நண்பன் ராமுவுக்கு ரொம்பவும் சந்தோசம் தன நண்பனின் அப்பாவை தேடும் படலம் இனிதாக முடிந்தது என்று.
கே/ராகவன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: